Skip to main content

Posts

Showing posts from January, 2019

பரிபூர்ண மனம் மீதான பாடல்கள்

தமிழில் : ஷங்கர்ராமசுப்ரமணியன் ஷின் ஷின் மிங் என்னும் இந்தப் பாடல், ஜென் குருவான சோசன் அவர்களால் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது. ஜென்னின் தெளிவான அனைத்துக் கருத்துகளையும் உள்ளடக்கிய அறிக்கையாக இது கருதப்படுகிறது. ஷின் ஷின் மிங்-க்கு “பரிபூர்ண மனம் மீதான பாடல்கள்” என்று இதன் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் எரிக் புட்கோனன் மொழிபெயர்த்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக மேற்கு நாடுகளில் ஜென் ஆர்வலர்களிடம் புழங்கிவரும் ஷின் ஷின் மிங்-ன் தமிழ் மொழிபெயர்ப்பு இது. இதை நான் செய்வதற்கான ஆங்கில மின்படியை(பிடிஎப்) கவிஞர் ஆனந்த் சரியான தருணத்தில் தந்தார். ஒரு சொல்லோ, ஒரு மகாவாக்கியமோ, ஒரு கவிதையோ, ஒரு நூலோ சரியான சமயத்தில் தான் என்னிடம் வந்து சேர்கிறது என்ற நம்பிக்கை அதிகரித்து வரும் காலம் இது. அப்படி வந்த ஷின் ஷின் மிங்-ஐ மொழிபெயர்த்து இங்கே பகிர்கிறேன்.எனது தானியப் பண்டாரத்தில் சேர்க்கிறேன்...    தேர்வென்று எதுவும் இல்லாதவர்களுக்கு மகத்துவப் பாதை சிக்கலானதல்ல. ஏக்கத்தையும் துவேஷத்தையும் விட்டுவிட்டால் அது தன்னாலேயே வெளிப்படுவது. வேறுபாடு சின்னஞ்சிறியதாக இருப்பி

கடவுளுக்குத் தெரியுமாவென்று கேட்கும் தஸ்தயேவ்ஸ்கி

- ஷங்கர்ராமசுப்ரமணியன் ‘ கரமசோவ் சகோதரர்கள் ’ நாவல் , ஆன்மாவுக்கும் சதை உந்துதலுக்கும் , இச்சைக்கும் நெறிகளுக்கும் , குற்றத்துக்கும் மீட்சிக்கும் , மிருகத்துக்கும் மனிதத்துக்கும் , இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே தஸ்தயேவ்ஸ்கி நடத்திய யாத்திரை . கடவுளும் சமயநெறிகளும் கடுமையாகக் கேள்விக்குள்ளான காலகட்டத்தில் மனிதனுக்கான மீட்சி சாத்தியமாவென்ற கேள்வியுடன்   கிறிஸ்துவைத் தீவிரமாகப் பரிசீலித்த படைப்பு இது . தன் காலத்தில் தான் பார்த்த வாழ்க்கை , சிந்தனைக் கோலங்களை முன்வைத்து கிறிஸ்துவை மதிப்பிட்டு , விமர் சித்து , அசௌகரியமான கேள்விகளைக் கேட்டு அவரைத் தன்வயப்படுத்தித் தக்கவைத்துக்கொள்ள ஒரு கலைஞன் செய்த மாபெரும் முயற்சி இது . பணத்துக்காக சொந்தப் பிள்ளையைக் கூட ஏமாற்றுவதற்குத் துணியும் , காமத்தை நிறைவேற்றும் கருவிகளாகவே இரண்டு மனைவிகளையும் பார்த்த , தாயில்லாமல் போன நிலையில் குழந்தைகளின் வளர்ப்புக்குக் கூட பொறுப்பேற்றுக் கொள்ளாத 55 வயது பணக்கார நிலக்கிழார் ஃபியோதர் பாவ்லோவிச் கரமசோவ், ஒரு நள்ளிரவில் கொல்லப்படுகிறார். இ