Skip to main content

தாவோ தேஜிங்கின் உண்மை



காலியாக இருக்கிறதென்பதால்
தாவோ பயன்படுத்தப்படும்போது
அது நிரப்பப்படுகிற சாத்தியமில்லை.
தன் நுண்மையின் நுண்மையில்
அது அனைத்தின் மூலாதாரமாகத் தோன்றுகிறது.
அதன் ஆழத்தைப் பார்க்கும்போது
அது எப்போதும் இருப்பதாகவே தோன்றுகிறது.

எனவே, தாவோ
யார் குழந்தை என்று எனக்குத் தெரியாது;
ஆனால், அது
இயற்கையின் மூதாதைபோலத் தோன்றுகிறது.(தாவோ தேஜிங்)

தமிழ் கவிதையில் கொக்கு போல, குருவி போல, மாக்கள் போல என்று திருக்குறளிலிருந்து தவிர்க்க முடியாததாக 'போல' உள்ளது ...

ஆனால் இந்தக் கவிதையின் கடைசி வரியில் தொனிக்கும் 'போல' உணர்த்தலின் நிச்சயத்தன்மையைத் தவிர்க்கிறது. இயற்கையின் மூதாதை போலத் தோன்றுகிறது என்று என்று சொல்லும் போது நிச்சயத்தன்மைக்கு மாறாக ஒரு இறகுத்தன்மை வந்துவிடுகிறது. ஆனால் உண்மையாகவும் இருக்கிறது. உண்மை போல....

இந்தக் கவிதையில் இருக்கும் 'போல' -வைப் போல நாம் இறகு போல எதையும் அழுத்தாத உண்மையாக வேண்டும்.

Comments