Skip to main content

Posts

Showing posts from June, 2018

டானடா சண்டூகா ஜென் கவிதைகள்

மலைகள் எதிர்பட்டால் மலைகளைப் பார்ப்பேன்மலைகள் எதிர்பட்டால், நான் மலைகளைப் பார்ப்பேன் மழை நாட்களில் நான் மழைக்கு செவிசாய்ப்பேன். இலையுதிர் காலம், வேனில் காலம், மழைக் காலம், குளிர் காலமென்றாலும். நாளையும் நன்றாகவே இருக்கும். இன்றிரவும் நன்றாகவே இருக்கும். உள்ளது உள்ளபடி உள்ளது உள்ளபடி மழை பெய்யும்போது, நான் ஈரமாகிறேன், நான் நடக்கிறேன். எத்தனையளவு உள்ளே போகிறேனோஎத்தனையளவு உள்ளே போகிறேனோ அத்தனை பசுமை மலைகள் எனது பிச்சைப் பாத்திரம் எனது பிச்சைப் பாத்திரம் ஏற்கிறது உதிர்ந்து விழுந்த இலைகளை.

முல்லாவின் மஞ்சள் குடை

முல்லாநஸ்ரூதின்ஒருஐந்துநட்சத்திரவிடுதியில்தங்கியிருந்தார். வீட்டிலிருந்துஅவசரமாகத்தந்திஒன்றுவந்ததால்அவசரஅவசரமாகபெட்டி, படுக்கைகளைக்கட்டி, ரயிலைப்பிடிக்கதரைத்தளத்திற்குவந்தார். கட்டணத்தைச்செலுத்திரசீதைவாங்கியபிறகு, காரில்ஏறப்போகும்போதுதான்அவருக்குதன்குடையைஅறையிலேயேதவறவிட்டுவந்ததுதெரியவந்தது.
முல்லாநஸ்ரூதின்விடுதிக்குள்நுழைந்துலிப்டில்ஏறிதனதுஅறைக்குச்சென்றார். 14-வதுமாடிஅது

வெறுமையுடன் ஒரு நடனம்

மார்டின் பட்லர்
வடிவமாக இல்லாததற்கு வடிவம் கொடுக்க முயல்வது தவிர்க்கவே முடியாத செயலாக இருப்பதால், ‘வெறுமை’ குறித்து எழுதுவதில் உள்ளார்ந்த நிந்தித்தல் உள்ளது. இன்னும் தெளிவாகப் பார்ப்பதற்கு உதவக்கூடிய, பயன்பாட்டுக்குப் பிறகு அகற்றப்பட வேண்டிய தற்காலிகச் சாரக்கட்டுமானங்களாகவே இந்தத் தன்மையிலான கட்டுரைகளை அணுக வேண்டும். ஒரு காலியான இடம் தொடர்ந்து காலியாக இருப்பதில்லை, ஒரு அமைதியான மனம் தொடர்ந்து அமைதியாக இருப்பதில்லை என்பதால் இயற்கை வெற்றிடத்தை வெறுக்கிறது என்று கூறப்படுவதுண்டு. உண்மையில் காலியான வெளியென்று எதுவுமே இல்லை. மிகக் குட்டியூண்டு இடத்தில் கூட, துணை அணுத்துகள்கள் சிறு இடைவெளிகளில் நுரைத்துத் தோன்றி மறைகின்றன. இருக்கும் எல்லாப் பொருட்களையும் ‘எல்லாம்’ என்று கூறி இருப்பை வெற்றிடத்திலிருந்து வேறுபடுத்துகிறார் லாவோட்சு.
அவர் வெற்றிடத்தை இருள், அமைதி மற்றும் மர்மம் நிறைந்ததாகக் காண்கிறார். எல்லாப் பொருட்களையும் அவர் தற்காலிகத் தோற்றங்களாக, உபயோகப்படுத்தப்பட்ட பின் நெருப்பில் எறிய வேண்டிய அலங்காரப் பொருட்களின் குப்பைகளாகவே அவர் பார்க்கிறார். “வானக, வையகத்திற்குத்/ தங்கள் கருணை சொந்தமில…

வாழ்வு ரயில் கவிதைகள்

அகன்றபள்ளத்தாக்கில் விழுந்துபரந்துசுழித்தோடும் நதி திரும்பும்வழியில் பக்கவாட்டுப்பாறையிலிருந்து நீரோட்டத்தைத்தொட்டபடி ஒருமரம் அங்கேஇப்போதுடினோசர்கள்இல்லை குரங்குகளும்இல்லை பார்த்தநானும்இல்லை வாழ்வுஉள்ளதுஅங்கே கடலில்கலப்பதற்குக்கொஞ்சம்முன்னர் நான்பார்த்துக்கடந்தரயிலிலிருந்து வெகுஆழத்தில் கோடையில் இன்னும்மிச்சமிருக்கும் கரியநீரில் எருமைகள்வெயிலையும் தண்ணீரின்சில்லிப்பையும் அசைபோட்டபடிஓய்வெடுக்கின்றன அந்தமனமற்றஎருமைகளைப்பற்றிப்