Skip to main content

Posts

Showing posts from February, 2018

களங்கமின்மையே போய் வா

மிகத்தாமதமாக, 1991-ல்எனதுப்ளஸ்டூகணிதஇறுதித்தேர்வுக்குஇரண்டுநாட்களுக்குமுன்னர்ஸ்ரீதேவி, விஜிஎன்றகதாபாத்திரமாகஎன்றைக்குமானதோழியாகஅறிமுகமானார். பாடமாகமட்டுமின்றிவாழ்க்கையின்கணிதமும்குழம்பத்தொடங்கியிருந்தநாட்களில்தோல்விஉறுதிஎன்றஉள்ளுணர்வுவந்திருந்தது. அந்தஉள்ளுணர்வேபடிப்படியாகஒருசாகசஉணர்வையும்தைரியத்தையும்கொடுக்கத்தொடங்கியிருந்தது. பாலகுமாரன், சுஜாதா, சரோஜாதேவிகதைகள்எனரகசியக்கனிகள்எனக்குத்திறந்துகொண்டேஇருந்தகாலம். சிறப்புவகுப்புக்குப்போவதாகவீட்டில்சொல்லிவிட்டு, ஒருசனிக்கிழமையில்ரத்னாதிரையங்கரங்கில்

ராம் கோபால் வர்மாவின் ஸ்ரீதேவி

தமிழில்: ஷங்கர்



விஜயவாடாவில் நான் பொறியியல் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, ஸ்ரீதேவி நடித்த புதிய படம் வெளியாகும் போதெல்லாம் டிக்கெட் வாங்க வரிசையில் காத்திருக்கும்போது திரையரங்கின் வெளியே உள்ள விளம்பரத்தட்டிகளில் அவரது படத்தை அண்ணாந்து ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டிருப்பேன்.
அவரது அழகும் கவர்ச்சியும் மிக வலிமையானது. அவரிடம் இருந்த நடிகையை பார்வையாளர்களும் திரையுலகமும் தெரிந்து கண்டு உணர்வதற்கு நிறைய நிறைய வருடங்களும் படங்களும் தேவைப்பட்டன. என்னைப் பொறுத்தவரையில் அவரிடம் உள்ள நடிகையை மிகச்சரியான முறையில் மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் மூலம் சேகர் கபூர் தான் வெளிப்படுத்தினார். அவர் ஆரம்பகாலங்களில் நடித்த படங்களிலேயே அவரது நடிப்புத்திறன் நன்கு வெளிப்பட்டிருக்கும்.
மிஸ்டர் இந்தியா திரைப்படத்தின் மூலம் பார்வையாளர்கள் புதிய ஸ்ரீதேவியை அடையாளம் கண்டனர். சேகர் கபூரின் அழகியல், அவரது அபாரமான அழகு மற்றும் நம்பமுடியாத நடிப்புத்திறன் இரண்டையுமே வெளிக்கொண்டு வந்தது. நான் எனது முதல்படமான சிவா(உதயம்) திரைப்படத்துக்கான வேலையில் இருந்தபோது ஸ்ரீதேவியுடனான எனது பயணம் தொடங்கியது. சென்னையில் இருந்த…

தமிழின் பெருமிதம் பாலசரஸ்வதி

ஷங்கர்ராமசுப்ரமணியன்இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்து, உலக அளவில் சிறந்த நிகழ்த்துக் கலைஞர்களில் ஒருவராகப் புகழ்பெற்ற பரதக் கலைஞர் பாலசரஸ்வதியின் இந்த வாழ்க்கை சரிதம், அவருடையதும் அவருடைய சாதனைகளுமுடைய தொகுப்பு மட்டுமல்ல; தமிழகமும், இந்தியாவும் நவீனமடைந்த கதையும் இதில் உள்ளது. ஒரு காலகட்டத்தில் கிராமங்களின் தொகுதியாக இருந்து, தென்னகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாக உருவான சென்னையின் வளர்ச்சி ஒரு கோட்டுச் சித்திரமாகத் துலங்குகிறது. உயிர்ப்புமிக்க பாரம்பரிய அறிவுச் சேகரத்தைத் தக்கவைக்க ஒரு மரபு புதுமையோடும் மாற்றத்தோடும் நடத்திய போராட்டத்தைத் துல்லியமாகப் படம்பிடிக்கும் வரலாறு இந்த நூலில் உள்ளது. இப்படியான பல பரிணாமங்களைக் கொண்ட முன்னுதாரணமான வாழ்க்கைச் சரிதை நூல் இது.
பல்வேறு புறக்கணிப்புகள் மற்றும் தனிப்பட்ட இடர்ப்பாடுகளுக்கு இடையில் தனித்துவம் வாய்ந்த ஒரு கலை மரபை சர்வதேச அளவில் உயிர் கொடுத்து நிறுவியவர் பாலசரஸ்வதி. பழமைக்கும் புதுமைக்கும் நடுவேயுள்ள பெரும் பிளவில் பழங் கதையாக மறைந்திருக்க வேண்டிய ஒரு மரபுக்கு உயிர் கொடுப்பதற்குப் பெரும் மேதமை அவசியம். பரத நாட்டியத்தைக் கடுமையாக வி…