Skip to main content

Posts

Showing posts from 2018

தமிழின் பெருமிதம் பாலசரஸ்வதி

ஷங்கர்ராமசுப்ரமணியன்இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிறந்து, உலக அளவில் சிறந்த நிகழ்த்துக் கலைஞர்களில் ஒருவராகப் புகழ்பெற்ற பரதக் கலைஞர் பாலசரஸ்வதியின் இந்த வாழ்க்கை சரிதம், அவருடையதும் அவருடைய சாதனைகளுமுடைய தொகுப்பு மட்டுமல்ல; தமிழகமும், இந்தியாவும் நவீனமடைந்த கதையும் இதில் உள்ளது. ஒரு காலகட்டத்தில் கிராமங்களின் தொகுதியாக இருந்து, தென்னகத்தின் பண்பாட்டுத் தலைநகரமாக உருவான சென்னையின் வளர்ச்சி ஒரு கோட்டுச் சித்திரமாகத் துலங்குகிறது. உயிர்ப்புமிக்க பாரம்பரிய அறிவுச் சேகரத்தைத் தக்கவைக்க ஒரு மரபு புதுமையோடும் மாற்றத்தோடும் நடத்திய போராட்டத்தைத் துல்லியமாகப் படம்பிடிக்கும் வரலாறு இந்த நூலில் உள்ளது. இப்படியான பல பரிணாமங்களைக் கொண்ட முன்னுதாரணமான வாழ்க்கைச் சரிதை நூல் இது.
பல்வேறு புறக்கணிப்புகள் மற்றும் தனிப்பட்ட இடர்ப்பாடுகளுக்கு இடையில் தனித்துவம் வாய்ந்த ஒரு கலை மரபை சர்வதேச அளவில் உயிர் கொடுத்து நிறுவியவர் பாலசரஸ்வதி. பழமைக்கும் புதுமைக்கும் நடுவேயுள்ள பெரும் பிளவில் பழங் கதையாக மறைந்திருக்க வேண்டிய ஒரு மரபுக்கு உயிர் கொடுப்பதற்குப் பெரும் மேதமை அவசியம். பரத நாட்டியத்தைக் கடுமையாக வி…

ஆனந்தா ஆற்றில் இறங்காதே

ஒரு நாள் புத்தர் தனது சீடன் ஆனந்தாவுடன் வனத்தைக் கடந்துகொண்டிருந்தார். அது கடுமையான கோடைக்காலம் என்பதால் புத்தருக்குத் தாகமாக இருந்தது. அவர், ஆனந்தனிடம், “கொஞ்சம் திரும்பிப் போனால், மூன்று நான்கு மைல் தூரத்தில் நாம் கடந்த ஒரு சிறு நீரோடை வரும். அதில் இந்தப் பிச்சைப் பாத்திரத்தில் நீர் மொண்டு வா. நான் மிகுந்த தாகம் மற்றும் சோர்வை உணர்கிறேன்” என்றார். ஆனந்தா வந்த வழியிலேயே திரும்பிச் சென்றான். ஆனால் அவன் அந்தச் சிறு நீரோடையை அடையும்போது, அவனுக்கு முன்னால் சென்ற சில மாட்டு வண்டிகள் நீரோடைக்குள் இறங்கித் தாண்டிச் சென்றதால், அந்த நீரோடை முழுவதும் கலங்கிச் சேறாகிவிட்டது. நீரினடியில் கிடந்த இலைகளும் மேலே வந்துவிட்டன. புத்தனின் சீடன் ஆனந்தா, நீரோடையின் நிலையைப் பார்த்துவிட்டு, இந்தத் தண்ணீரைக் குடிக்கவே முடியாது என்று நினைத்து, வெறும் கையுடன் திரும்பிவிட்டான். “நீங்கள் கொஞ்சநேரம் காத்திருக்க வேண்டும். கொஞ்சம் பொறுங்கள். அடுத்த இரண்டு மூன்று மைல்களில் ஒரு பெரிய நதி ஒன்று இருக்கிறது. அங்கே போய்த் தண்ணீர் கொண்டு வருகிறேன்’ என்று புத்தரிடம் கூறினான். ஆனால் புத்தரோ, மறுபடியும் சிறு நீரோடைக்குச் ச…

முல்லா சாப்பிட்ட அல்வா

முல்லா நஸ்ரூதினும் அவருடன் இரண்டு ஞானிகளும் மக்காவுக்குப் பயணம் செய்தார்கள். அவர்கள் தங்கள் பயணத்தின் கடைசி நிறுத்தமான ஒரு கிராமத்தை வந்தடைந்திருந்தனர். அவர்களிடமிருந்த பணமும் காலியாகிவிட்டது. மிகச் சொற்பமான பணமே அவர்களிடம் கைவசம் இருந்தது. அந்தக் கிராமத்தில் பிரபலமான அல்வாவை அந்தப் பணத்தில் வாங்கிக்கொண்டனர். மூன்றுபேரும் சாப்பிடும் அளவுக்கு அவர்களால் வாங்க முடியவில்லை. பங்குபோட்டாலும் எல்லாரும் பசியாகத்தான் தூங்கவேண்டியிருக்கும். என்ன செய்வது? ஒருவர் மட்டும் சாப்பிட்டால் பசியாறலாம் என்ற எண்ணத்தில் மூன்றுபேரும் தங்களது பசியே முக்கியமானது என்று சண்டைபோடத் தொடங்கினார்கள். முதல் துறவி சொன்னார். “நான் நோன்பு இருப்பவன். பல ஆண்டுகளாகப் பிரார்த்தனையிலும் ஈடுபட்டுவருபவன். என்னைவிட இங்கே யாரும் புனிதமான மனிதர்கள் இல்லை. அதனால் கடவுள் எனக்கே இந்த அல்வாவைத் தர விரும்புவார்” என்றார். இரண்டாமவரோ மிகவும் படித்தவர். “நீங்களோ பல தவங்களைச் செய்தவர். நானோ அறிஞன். எனது வாழ்நாள் முழுவதும் அறிவைச் சேகரிப்பதிலேயே செலவழித்தவன். விரதமும் பிரார்த்தனையும் செய்பவர்களால் இந்த உலகத்தவர்களுக்கு உண்டாகும் பயனைவிட என்ன…

அம்மாவைப் பார்த்துச் சிரிக்கவில்லை

பச்சிளம் குழந்தை அம்மாவின் முகத்தைப் பார்த்து சிரிக்கவில்லை மேலிருந்து பார்க்கும் அம்மா தன் முகம் பார்த்து தன் குழந்தை சிரிப்பதாய் நினைத்து இறும்பூதெய்கிறாள் முதல் அமுது தருபவள் அவள் கொஞ்சம் தவறாகவும் பெருமிதம் கொள்ளலாம் தானே. குழந்தை பால் சுரக்கும் அரைக் கோளத்தைப் பார்த்துச் சிரிக்கிறது அந்த அரைக்கோளம் தான் அம்மாவென்று அதற்குப் பதிந்துவிடுகிறது அதன் பின்னர் அம்புலி பந்து சோற்றுக்கவளம் என முக்கியமானவை எல்லாவற்றையும் இந்த உலகிலிருந்து அது ஒரு கோளமாகப் பகுத்து பகுத்துக் காண்கிறது அதனால் தான் கோளத்தைத் தொடும்போதெல்லாம் அந்தக் குழந்தை எல்லா வயதிலும் தனது அம்மாவுக்குத் திரும்பி விடுகிறது. 

ஆதிவாசிகளைத் தவிர யாரும் பறப்பதில்லை

அந்தத் தீவில்  கொலைகள் நடப்பதில்லை தவறவிடப்பட்ட பொருட்கள் அங்கேயே கிடக்கின்றன குடியேறிகளின் வீடுகள் அவர்களின் கால்நடைகள் உணவு விடுதிகள் ஆலயங்கள் தெய்வங்கள் பாத்திரங்கள் உணவுகள் எங்கோ பயணத்திலிருக்கின்றன இங்கே இருள் சீக்கிரமே வந்துவிடுகிறது பகலில் மட்டுமே விமானங்கள் இறங்குகின்றன. தேனிலவுக்கு வந்திறங்கும்  புது மருதாணிப் பெண்கள் சருகு ஆடைகளாக மாறிவிடுகின்றனர் இரண்டு நட்சத்திர விடுதி ஒன்றின்  ஜன்னல் கதவுகள்  கடல்பஞ்சாய் திறந்து திறந்து  படபடக்கின்றன அந்தக் குட்டித்தீவில் ஆதிவாசிகளைத் தவிர  வேறு யாரும் இரவில் பறப்பதில்லை வளைவுகளும் நெளிவுகளும் மிகுந்த மலைப் பாங்கான தெருக்களில் காற்று மெதுவாக நுழைகிறது  மதியம் பெய்த மழைக்குப் பிறகு தூய்மையாக  நீர் ஓடும் வடிகால் பாசிச்சுவரில்  நிற்கும் பெரணிச் செடிகள் நோவாவுடையது கப்பல் அல்ல கப்பல் அல்ல என்று  என்னிடம் கிசுகிசுத்தன.  

அனைத்துக் கன்னங்களிலும் ஈரம்

ஒரு பெண் தன்னிடம் உறவு கொள்ள வந்த அனைத்து ஆண்களிடமும் காதல் மற்றும் நேசத்துடன் இருந்தாள். ஆனால் அவளது கன்னம் எப்போதும் கண்ணீரால் ஈரத்துடனேயே இருந்தது. இது ஒரே ஒரு வரிக்கதைதான். ஆனால் ஒட்டுமொத்த மனிதகுலத்துக்குமான கதை. இதுதான் இங்கே நிகழ்கிறது. காதலும் நேசமும் சாத்தியம்தான். ஆனால் அது ஒருபோதும் பாலுறவைத் தாண்டி உயர்வதேயில்லை...அதனால் தான் அனைத்துக் கன்னங்களும் ஈரத்துடனேயே காணப்படுகின்றன.

ஓஷோவின் முல்லா நஸ்ரூதின்

முல்லாநஸ்ரூதின்ஒருஐந்துநட்சத்திரவிடுதியில்தங்கியிருந்தார். வீட்டிலிருந்துஅவசரமாகத்தந்திஒன்றுவந்ததால்அவசரஅவசரமாகபெட்டிபடுக்கைகளைக்கட்டி, ரயிலைப்பிடிக்கதரைத்தளத்திற்குவந்தார். கட்டணத்தைச்செலுத்திரசீதைவாங்கியபிறகு, காரில்ஏறப்போகும்போதுதான்அவருக்குதன்குடையைஅறையிலேயேதவறவிட்டுவந்ததுதெரியவந்தது.
முல்லாநஸ்ரூதின்விடுதிக்குள்நுழைந்துலிப்டில்ஏறிதனதுஅறைக்குச்சென்றார். 14-வதுமாடிஅது. முல்லாதங்கியிருந்தஅறைஏற்கனவேஒருபுதுமணத்தம்பதிகளுக்குஒதுக்கப்பட்டிப்பதாகதகவல்தெரியமுல்லாதன்அறையின்முன்னால்என்னசெய்வதென்றுதெரியாமல்குறுக்கும்நெடுக்குமாகஅலைந்தார்.
ரயிலுக்குச்சீக்கிரமேகிளம்பவேண்டியநெருக்கடிஇருப்பினும்முல்லாவால்சபலத்தைக்கைவிடமுடியவில்லை. அறையின்கதவுத்துவாரம்வழியாகஉள்ளேநடப்பதைப்பார்க்கத்தொடங்கினார்.
அவர்கள்புதுமணத்தம்பதிகள். திருமணச்சடங்குகளால்மிகவும்களைப்படைந்து, விருந்தினர்கள்

கண்ணீரைச் சிரிப்பாக்கிய அகதி

கனடாவில் வாழும் இலக்கியச் செயல்பாட்டாளரும், ‘காலம்’ இதழின் ஆசிரியருமான செல்வம் அருளானந்தம், இலங்கையிலி ருந்து பாரீஸுக்குப் போய் வாழ்ந்த ஒன்பது வருட அனுபவங்களை நினைவுத் தீற்றல்களாக எழுதியுள்ள நூல் ‘எழுதித் தீராப் பக்கங்கள்’. பெரும்பாலும் இந்திய, தமிழக வாழ்வையொத்த குடும்பம், ஊர், சாதிசனம் என்ற குண்டான்சட்டி பரப்பளவே கொண்ட ஒரு சம்பிரதாயமான யாழ்ப் பாண வாழ்க்கையிலிருந்து உயிர்பயம் துரத்த எல்லைகளையும் கடல்களையும் கடக்க நேர்ந்த அகதியின் குறிப்புகள் இவை. கவிஞர் பிரமிளின் வார்த்தைகளில் சொல்வதானால் ‘ஒரு சமூகத்தின் உயிரை இருபத்தி நாலு மணிநேரமும் இருள் சூழத் தொடங்கிய காலத்தில்’ யாழ்ப் பாணத்திலிருந்து புறப்பட்ட முதல் தலைமுறை அகதிகளில் ஒருவர் செல்வம். இன ஒடுக்குமுறையாலும் முரண்பாடுகளாலும், வரைபடத்தில் கூட முன்னர் பார்த்தறியாத நாடுகளை நோக்கித் துரத்தப்படும் ஒரு அகதியின் கண்ணீர் உலர்ந்த சிரிப்பை ஒவ்வொரு அத்தியாயத்திலும் உணர முடிகிறது. ‘எழுதித் தீராப் பக்கங்கள்’ நூலை சுவாரசியமான கேலிச் சித்திரங்களின் தொகுப்பு என்று சொல்லலாம். பிறரைக் கண்டு சிரிப்பது போன்றே தன்னைப் பார்த்தும் சிரிக்கத் தெரிந்த அபூர்வம…

ஒரு தொலைவிலிருந்து ஞாநி

தாம் கொண்ட கருத்தியலையும் தமது தனி வாழ்க்கையையும் வேறுவேறாகப் பார்க்கவியலாத இலட்சியவாதத் தலைமுறை ஒன்றின் பிரதிநிதி ஞாநி. சினிமா, அரசியல், எழுத்து அனைத்துமே கேளிக்கையை மையமாகக் கொண்டு வெகுஜனக் கலாச்சாரத்தைத் தீர்மானித்த 1970, 80-களில் இலக்கியம், கலை, அரசியல், சிந்தனைத் துறைகளில் எந்த உடனடிப் பயனையும் கருதாது சொந்த நஷ்டங்களைப் பொருட்படுத்தாது ஈடுபட்டவர்களில் ஒருவர். பெண்ணியம், பெரியாரியம், சுற்றுச்சூழல், தலித்தியம், மாற்றுக் கல்வி, மாற்று மருத்துவம், விளிம்பு நிலை அரசியல், தீவிர இலக்கியம் போன்றவை மீது இன்று அரசுக்கும் வெகுஜன ஊடகங்களுக்கும் வெகுமக்களுக்கும் ஏற்பட்டிருக்கும் அக்கறைக்கு இவர்கள்தாம் காரணம்.

மென்மை, மிதம், தீவிரம் என அடையாளப்படுத்த முடியுமே தவிர, இந்த ஆங்க்ரி யங்மேன்கள் எல்லாரையும் மார்க்சியம் பாதித்திருந்தது. இவர்கள் அனைவரும் உயர், மத்தியதர வர்க்க, முன்னேறிய சமூகங்களிலிருந்து வந்த இளைஞர்களாகவே பெரும்பாலும் இருந்துள்ளனர். ஞாநியைப் பொறுத்தவரை எந்தத் தீவிரமான விஷயமும் வெகுமக்களைச் சேரும் விதமாக இருக்க வேண்டும் என்பதே அவரது பிரதான வேலைத் திட்டமும் நோக்கமுமாக இருந்தது. ‘தினமணி’…

அவளுக்குக் காயம் படுவதில்லை

சைக்கிள் ஓட்டத் தொடங்கி ஆறு மாதங்களான பிறகு எனது பன்னிரெண்டு வயது மகள் முதல்முறையாக காயம்படும் அளவுக்கு நேற்றுத் தான் விழுந்தாள். அடிபடுவதும் காயங்களும் தொடர் நினைவுகளாக இருந்த எனது தலைமுறையின் ஞாபகம் எனக்கு வந்தது. அவள் காண்பித்த காயங்களை விட, அவளுக்கும் அந்தக் காயங்களுக்கும் இருக்கும் இடைவெளி மீது எனது கவனம் குவிந்தது. அந்த இடைவெளியில் தான் நான் காண்பிக்க வேண்டிய அதிர்ச்சியின் அசலும் கனமும் குறைந்திருக்க வேண்டும். அவள் என்னைப் போல அடிக்கடி காயப்படுவதுமில்லை.   
பிறந்து மொழி பயிலத் தொடங்கும் முன்னர், தவழத் தொடங்கிய போதே எனது தங்கை, கழற்ற இயலக்கூடிய அடிபம்பை இழுத்துப்போட்டுக் கன்னத்தைக் கிழித்துக் கொண்டாள். அவள் முகத்திலும் எனது  நினைவிலும் அந்த நாளும் அந்தத் தருணமும் உறைந்திருக்கிறது. அரசு மருத்துவமனையின் திறந்த ஜன்னல் வழியாக அவளுக்குத் தையல் போட்டதை அழுதுகொண்டே பார்த்த ஞாபகமும் இருக்கிறது. பென்சில் சீவும் போது கையை நடுவில் விட்டு எலும்பு தெரிய வெள்ளையாகப் பிளந்து ரத்தமாகப் பொழிந்த என் நடுவிரல் இன்னமும் ஞாபகத்தில் உள்ளது. சைக்களிலும் கிரிக்கெட்டும் சிரங்கும் ஏற்படுத்தியவை 15 வயதுவரை எ…