Skip to main content

Posts

Showing posts from September, 2017

இருட்டில் ஒளியேற்றப்படும் உண்மைகள்

ஒரு    இரவு நேரத்தில் மூன்று கார்கள் துருக்கிய கிராமப்புறச் சாலையில் மூன்று கார்கள் பயணிக்கின்றன. அந்தக் கார்களில் ஒரு பிரேதப் பரிசோதனை மருத்துவர், அரசு வழக்கறிஞர், போலீஸ் அதிகாரி, காவல்துறை ஊழியர்கள், குழிதோண்டுபவர்கள், கொலையில் பங்குபெற்றதாக கருதப்படும் அண்ணன்,தம்பி இருவருடன் சேர்ந்து பயணிக்கின்றனர்.    குடிபோதையில் கொலைசெய்து புதைத்த ஒரு மனிதனின் பிணத்தைத் தோண்டியெடுப்பதே அந்தப் பயணத்தின் நோக்கம். கார்களை அங்கங்கே நிறுத்தி பயணம் தொடர்கிறது. நள்ளிரவில் குடிபோதையில் பிணத்தைப் புதைத்ததாலும், வறண்ட பாலைவனத்தின் நிலப்பரப்பு ஒரே மாதிரியாகத் தோற்றமளிப்பதாலும்,கொலையாளிகளா ல் சரியாக இடத்தைச் சொல்லமுடியாமல் குழப்பம் ஏற்படுகிறது. சீக்கிரம் வேலை முடிந்து விடும் என்ற நினைத்தவர்களுக்கு அந்த நீண்ட பயணம் களைப்பு தருகிறது.  ஒரு கட்டத்தில் எல்லாரும் பயணத்தில் பேசிக்கொள்ளத் தொடங்குகிறார்கள். இளம் ஆட்டிறைச்சியின் ருசி, நீரிழிவு நோயால் அடிக்கடி சிறுநீர் வருவது, குடும்பம்,மனைவியர், மரணம், வேலையில் இருக்கும் அதிகாரப் பாகுபாடு, அலுப்பு, குழந்தைகளைக் கவனிக்கமுடியாதது என அந்தப் பேச்சு நீள்கிறது. ஒர

வெளிச்சம் தின்ற உடல்

ஷங்கர் தொண்ணூறுகளின் மத்தியில் சிறுபத்திரிகைகள், சிறுபத்திரிகைகளில் எழுதுபவர்கள் அருகி வரும் உயிரினங்களாக தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்த காலத்தில், ‘காலச்சுவடு படியுங்கள்’ என்ற ஸ்டிக்கர் ஒட்டி ஆட்டோ ஓட்டியவர் சிவதாணு. நாகர்கோவிலிலிருந்து சிறுவயதிலேயே சென்னை வந்தவர். சினிமாவில் நடிக்கும் ஆசையுடன் இலக்கிய வாசிப்பும் சேர்ந்திருந்தது. நடிகர்கள் பாலாசிங், நாசருடன் நேரடியான பழக்கம் இருந்தது. சுந்தர ராமசாமி, நாஞ்சில் நாடன், ஜெயமோகன் ஆகியோரின் எழுத்துகளில் மட்டுமின்றி நேரிலும் பரிச்சயம் கொண்டவராக அப்போது இருந்தார். சென்னைக்கு வரும் எழுத்தாளர்கள் எல்லாரும் ஒருமுறையாவது அவருடைய ஆட்டோவில் பயணித்திருப்பார்கள். அவரது தெற்கத்தி வெள்ளந்தித்தனத்தாலும் சுபாவத்தாலும் சீக்கிரமே நிறைய நண்பர்களையும் சேர்த்திருந்தார். சுந்தர ராமசாமி சென்னை வந்தால் அவரை வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் செல்லும் ஆஸ்தான சாரதியாக ஆனார். வெகுஜனக் கதைகளுக்கும் சிறுபத்திரிகை கதைகளுக்கும் இடைப்பட்ட சில சிறுகதைகளையும் எழுதினார். அவரது ஆட்டோ பல இடங்களுக்கும் பயணப்படத் தொடங்கியது. 1999-ல் பாலு மகேந்திரா, தமிழ் சிறு