Skip to main content

நீ புலிதான் நீ புலிதான்



ஷங்கர்ராமசுப்ரமணியன்




எத்தனை லட்சம் வருஷங்கள்

ஆகிவிட்டன

இன்னும்


என் வீட்டின் இரும்பு கேட்டிற்குள்


நுழையும் போது


பூனை தயங்கி நின்று


காதை வாலை


உயர்த்தி மௌனமாய்


சுற்றுமுற்றும் நோட்டமிடுகிறது


கம்பிகளுக்குள்


மெல்ல அடியெடுத்து வைக்கிறது


இதயத்திலும் ரோமத்திலும்


புதிதாகப் பிறந்த விழிப்பு


என் வீடு



என் தெரு என் தோட்டம் என்று சொல்லப்படும்


உன் காட்டில்


உன் உடலை நீட்டு


நீ புலிதான் நீ புலிதான்


என்று இரைச்சலிடுகிறது எனது விழிப்பு.

Comments