Skip to main content

Posts

Showing posts from June, 2016

குரங்குகள் சொல்லும் நீதிக்கதை

ஷங்கர்ராமசுப்ரமணியன்  அம்மா புகட்டிய காலத்திலிருந்து எனக்கு நீதிக்கதைகள் இன்றுவரை தேவையாகவே இருக்கின்றன. எளிய நீதிக்கதைகள் முதல் சிக்கலான நீதிக்கதைகள் வரைத் தேடித்தேடி அவை சொல்லும் நெறிமுறைகள் வழியாக,  எனது  அன்றாடத்துக்குள் ளும் , என்னைச் சுற்றி நடக்கும் துயரமும் ரணமும் சிறு இளைப்பாறுதல்களும் கூடிய நிகழ்ச்சிகள், அபத்தங்கள், புதிர்களுக்கு ள்ளும்  ஒரு ஒழுங்கை நான் கற்பிக்கவோ புனரமைக்கவோ செய்கிறேன். என்னைச் சுற்றி நடக்கும் ஒரு நிகழ்வுக்கு கால, வெளிப் பரப்பளவில் மிக அருகிலிருக்கும், கைக்குத் தென்படும் காரண காரியங்களைத் தேடாமல், என் வாழ்வுக்கு அப்பாலும் முன்பும் காரணம் இருக்கலாம்; மனிதத்துவத்துக்கு அப்பாற்பட்ட காரணமும் இருக்கலாம்; அதனால் சஞ்சலமில்லாமல் புகார்கள் இல்லாமல் அமைதியாக இரு என்பதை என் தலையில் குட்டிக் குட்டி உணர்த்தும் நீதிக்கதைகள் அடிக்கடி தேவையெனக்கு. கட்டற்ற நுகர்வு ஒன்றே வாழ்வென்றாகிவிட்ட இக்காலகட்டத்தில் அடங்கவேயடங்காத புலன்கள் வழிநடத்தும், குறுக்கும்நெடுக்குமான சபலத்தின் பாதைகளில் திரியும் நவீன மனிதனுக்கு, மேலதிகமாக தற்காலத்தின் பாடுகளையும் அகப்படுத்தியிருக

சென்னையில் பேய்கள் இல்லை

ஷங்கர்ராமசுப்ரமணியன் கடவுள்   இருக்கிறார் என்று நிச்சயமாக என்னால் நூறு சதம் சொல்ல இந்த வயதுவரை இயலவில்லை. ஆனால்   அழகு , இயற்கை ,  நீதி ,  கவிதை மற்றும் நிமித்தங்களில் நம்பிக்கை கொண்ட ,  பகுத்தறிவால் விளங்கவே   இயலாத அபூர்வமான சில ஆசிர்வாதங்களையும் கருணையையும்    அபூர்வமாக அவ்வப்போது அனுபவித்திருக்கும் என்னால்   அப்படி ,  இறைமையைப் பரிபூரணமாக மறுக்கவும் முடியாது.   நாம் பார்க்கவில்லையே தவிர ,  பேய் களும் வாதைகளும்   பிசாசுகளும் ,  குட்டிச்சாத்தான்களும் இந்த உலகில் உண்டு என்றுதான் சில மாதங்கள் முன்புவரை   முழுமையாக நம்பிக்கை இருந்தது.   என்னுடைய  20  வயதுகளில் நண்பர் லக்ஷ்மி மணிவண்ணன் ,  சிறுதெய்வங்கள் மற்றும் வாதைகளைக் கண்டுபிடிப்பதிலும் ,  அந்த அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்துகொள்வதிலும்   ஈடுபாடும் தீவிரமும் கொண்டிருந்தார். நானும் சளைக்காமல் அவருடன் சென்றிருக்கிறேன்.   முற்பகலின் கழுவி விடப்பட்ட ஈரத்தரை டாஸ்மாக் கடைகள் ,  மூர் மார்க்கெட் காவல் நிலையம் , இருட்டில் மினுமினுக்கும் பல்லாவரம் ரயில் நிலையம்  முதல் நாகர்கோவில் இசக்கியம்மன் கோவில் வரை அவர் என்னை அழைத்துச் செ