Skip to main content

Posts

Showing posts from March, 2016

புகைப்படங்கள் நம் ஆயுளைக் குறைக்கும்

ஷங்கர்ராமசுப்ரமணியன்
இந்தியர்கள், வரலாற்றையும் வரலாற்று நிகழ்வுகளையும் பண்பாட்டையும் அந்தந்தக் காலத்திய பொருள்சார் கலாசாரத்தையும், ஆவணப்படுத்துவதில் ஈடுபாடில்லாதவர்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அந்தக் குற்றச்சாட்டில் பெரும்பகுதி, நமது நவீன காலப் பார்வையில் உண்மையாக இருப்பினும், எல்லாவற்றையும் ஆவணப்படுத்தி என்ன ஆகப்போகிறது என்ற விட்டேத்தியாக இருந்த நம் முன்னோர்களின் விவேக ஞானத்தையும் நாம் இப்போது பரிசீலித்தே ஆகவேண்டும்.
பிறப்பு முதல் மரணம் வரை ‘செல்ஃபி’ எடுக்கப்படும் காலகட்டத்தில் இருக்கிறோம். புகைப்படக் கருவிக்கு முன்னால் அரிதாக நின்றால்கூட ஆயுள் குறைந்துவிடும் என்று ஒரு நம்பிக்கை நம்மிடையே சில பத்தாண்டுகள் முன்புவரை நிலவியது. அது இப்போதைய தலைமுறையினருக்கு வினோதமாகப்படலாம். தோன்றியது எல்லாவற்றையும் சொல்லவோ எழுதவோ வேண்டியதில்லை; தோன்றுவது எல்லாவற்றையும் படம்பிடிக்க வேண்டியதில்லை; செய்வதெல்லாவற்றையும் பதியவோ ஆவணப்படுத்தவோ வேண்டியதில்லை; ஒரு காலத்தில் நமக்கு இப்படியான ஒரு விவேகம் இருந்திருக்கிறது. இந்த நடைமுறை விவேகத்தின் வெளிப்பாடாகவும் இதுபோன்ற ‘மூடநம்ப…