Skip to main content

Posts

Showing posts from February, 2015

ஒன்று மற்றதை அறியத் தொடங்குகிறது

ஷங்கர்ராமசுப்ரமணியன் ஒரு பிரக்ஞை நெரிசலான சாலையில் பைக் ஓட்டுகிறது இன்னொரு பிரக்ஞை நிச்சிந்தையுடன் தெருவைக் கடக்கிறது இரு பிரக்ஞைகள் இரு பிரபஞ்சங்கள் மோதிக் கொள்கின்றன அப்போது ஓருலகம் கருக்கொள்கிறது முதல்முறையாக ஒரு பிரக்ஞை மற்றதை அறியத்தொடங்குகிறது ங்கோத்தா என்கிறது பைக்கில் வந்த பிரக்ஞை ஏண்டா தாயோளி என்கிறது குறுக்கே கடந்த பிரக்ஞை

அம்பத்தூர் தொழிற்பேட்டை

  ஷங்கர்ராமசுப்ரமணியன்  ஏற்கெனவே  நெருக்கடி தொடங்கிவிட்ட  காலையில்  இரண்டு பேருந்துகளுக்கிடையிலான  மரண இடுக்கில்  லாவக  மானாய் புகுந்து ஓடி  70 டியில் ஏறுகிறாள்  புதுப்பெண் முத்துச்செல்வி  மணிகள் அதிரும் கொலுசு  பளிச்சென்று ஒளிரும் மஞ்சள் சரடு  ஈரம் சொட்டும் ஜாதிமல்லி    ஒருபக்கம்  அழைக்க  அவளை தினசரி தவறாமல் இழுத்துக் கொண்டு போகிறது அம்பத்தூர் தொழிற்பேட்டை

எனது மதுக்குப்பி

 ஷங்கர்ராமசுப்ரமணியன்  யுத்தங்களில் நொறுங்கி உடையாமல்  காலத்தின் பழைமைக்குணம் ஏறாமல்  கடல்களின் குளிர் தாங்கி  மிதந்து வந்த  மதுக்குப்பி  நுரைத்து நிற்கும்  என் ஆனந்தம்  யாருக்கும் இதில் ஒரு துளியைக் கூட பகிரவோ  உரைக்கவோ என்னால் இயலாது  என் துக்கம்