Skip to main content

Posts

Showing posts from September, 2014

யவனிகா ஸ்ரீராம் நேர்காணல்

வர்க்கமும் வறுமையும் அழகியல்தானே சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன் தமிழ் கவிதைச் சூழலில் 90-களின் ஆரம்பத்தில் ‘இரவு என்பது உறங்க அல்ல’ கவிதைத் தொகுதி வாயிலாக ஒரு அரசியல் கவிஞராக வாசகர்களை ஈர்த்தவர் யவனிகா ஸ்ரீராம். உலகமயமாதல் காரணமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாறுதல்களை அழகியல் உணர்வுடன் பதிவுசெய்த கவிதைகள் இவருடையவை. சொற்கள் உறங்கும் நூலகம், தலைமறைவுக் காலம் போன்றவை இவருடைய முக்கியமான கவிதைத்தொகுதிகள். நிறுவனங்களின் கடவுள் என்ற கட்டுரைத் தொகுதியும் வெளிவந்துள்ளது...தி இந்து தமிழ் நாளிதழில் வெளிவந்த நேர்காணலின் விரிவான பகுதி இது... உங்களைப் பாதித்த கவிதைகளைச் சொல்லுங்கள்… பாரதிதாசன் வழிவந்த வானம்பாடிக் கவிதைகள்தான் எனக்கு முதலில் அறிமுகமானது. நா.காமரசான், அப்துல் ரகுமான், அபி ஆகியோரை வாசித்தேன். திராவிட இயக்கத்தின் கருத்துகளும், மார்க்சிய கோஷங்களும் சேர்ந்த உணர்வுபூர்வமான கவிதைகளாக அவை இருந்தன. ஆனால் அந்தக் கவிதைகளுக்கும் யதார்த்தத்துக்கும் தொடர்பில்லை. தமிழ்நாடு முழுக்க வானம்பாடிகள் பரவிக்கொண்டிருந்தனர். இப்படியான சூழ

எங்கும் மௌனம்

ஷங்கர்ராமசுப்ரமணியன் எங்கும் குளிர் கொஞ்சம் மிச்சம் இருக்கும் வேளையாக இந்த விடியல் இருக்கிறது உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் வீடுகள் சோம்பல் முறிக்கின்றன நடுவயதுக்காரர்களின் காலைநடை ஓசைகள் குழந்தைகளைக் குளியலறைக்கு விரைவுபடுத்தும் அம்மாக்களின் வசைகளைத் தவிர காற்றில் வேறு எந்த மாசும் கலக்காத புனிதவேளை அது மாடிப்படிகள் இலைகள் பாத்திரங்கள் நமது செயல்கள் மீது இன்னும் இருட்டும் மௌனமும் சூழ்ந்திருக்கிறது முதியவர்கள் மட்டும் நுரையீரல் மீது வெயில் அடிப்பதற்காக பால்கனிகளில் காத்திருக்கின்றனர்.

தற்செயல்களின் சூதாட்டம் என் கதைகள் - சுரேஷ் குமார இந்திரஜித் நேர்காணல்

  சந்திப்பு: ஷங்கர்ராமசுப்ரமணியன் தமிழின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களில் ஒருவர் சுரேஷ்குமார இந்திரஜித். 1980-களில் எழுதத் தொடங்கிய இவரின் கதைகள் அன்றாட வாழ்க்கை மற்றும் உறவுகளின் மர்மங்கள் மீது கவனம் குவிப்பவை. அலையும் சிறகுகள், மாபெரும் சூதாட்டம், நடன மங்கை உள்ளிட்ட ஏழு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ளார். வருவாய் துறையில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற இவர் மதுரையில் வசித்துவருகிறார். தி இந்து கலை-இலக்கியம் பகுதியில் வெளியான நேர்காணலின் முழுமையான வடிவம் இது... உங்களைப் பாதித்த முதல் கதை எது? ஞாபகம் உள்ளதா? அப்பா என் சின்ன வயதிலேயே தவறிவிடுகிறார். அண்ணாவுக்கு கல்யாணம் ஆகியிருந்தது. அவர் கூட தான் நானும் எங்கள் அம்மாவும் இருந்தோம். அண்ணி வழியாகத் தான் கதைகள் எனக்கு அறிமுகமானது. அண்ணி தான் படித்த கதைகளை நாங்கள் சாப்பிடும்போது சொல்வார்கள். ஜெயகாந்தனது பொம்மை கதையை அப்படித்தான் கேட்டோம். அந்தக் கதையில் ஒரு பணக்கார வீட்டுக் குழந்தை, ஒரு ஏழை வீட்டுக் குழந்தை பக்கத்துப் பக்கத்து வீடுகளில் இருக்கிறார்கள். பணக்காரக் குழந்தைக்கு சொந்தமாக பொம்மை இருக்கிறது. அதை வைத்து விளையாடுகிற