Skip to main content

Posts

Showing posts from January, 2013

உழைப்பாளர் சிலை மீது சலனத்தின் காகம்

ஷங்கர்ராமசுப்ரமணியன்





சென்னையின் பொது அடையாளங்களில் ஒன்றுஉழைப்பாளர் சிலை. அதை வடித்த சிற்பி, தமிழகத்தின் நவீன கலை முன்னோடிகளில் ஒருவரான ராய் சௌத்ரி. அந்தச் சிலையை எனக்குத் 'தெரியும்' என்று நினைத்திருந்ததால் அதன் மேல் எனக்கு கூடுதல் கவனம் இருந்ததில்லை. மனதின் மழுங்கலான  நினைவுகளில் ஒன்றாக அச்சிலை சில நாட்களுக்கு முன்பு வரை இருந்துவந்தது.
வளர்ந்தபிறகு உழைப்பு, உழைப்பு தொடர்பாக பொதுப்புத்தி வைத்திருக்கும் புனிதம், கடமையைச் செய் பலனை எதிர்பாராதே என்ற பதம் இன்று கொண்டிருக்கும் பொருள், அந்தப் பதத்தின் மீதான எரிச்சல், தொழில்மயமான உலகில் மனிதன், நவீன எந்திரத்தின் இன்னொரு உறுப்பாக சுருங்குதல் போன்றவற்றால் உழைப்பு என்ற விஷயத்தின் மீது மிகுந்த வெறுப்பே இன்னமும் எனக்கு இருக்கிறது. அந்த வெறுப்பு எனக்கு உழைப்பாளர் சிலைமீதான அலட்சியமாகவும் மாறியிருக்கலாம்.
நான் மிகவும் மதிப்பு வைத்திருக்கும் எழுத்தாளர் சி.மோகன் போன்றோர், ராய் சௌத்ரி பற்றி எழுதிய கட்டுரையில்உழைப்பாளர் சிலை பற்றியும் எழுதியிருந்தும் ஏனோ நான் உழைப்பாளர் சிலையை விலக்கியே வைத்திருந்தேன்.
சில மாதங்களுக்கு முன்பு, எனது புகைப்படக்கார ந…