Skip to main content

Posts

காதல் அற்ற காதல் கவிதைகள்

இந்தக்கோடை எந்தநினைவுகளின்மேலும்சாய்ந்து இளைப்பாறவோ துக்கப்படவோ அனுமதிக்கப்போவதில்லை பழுத்துஉதிர்ந்து வேனலின்நீராவிக்கலத்தில் அவியும்இலைகளின் மணத்தைநான்அப்படியே முகரவேண்டும்

அதிகாலையில்ஆறுதலாகப்பெய்யும் பின்பனிக்கு என்உடலை எந்தமுன்ஞாபகங்களுமின்றி சுத்தமாகத்துடைத்துத்தரவேண்டும்

ஒருபறவையைஅதன்வாலின்துடிப்போடு நிகழ்கணத்தில்அப்படியேபார்க்கவேண்டும் கடக்கும்பெண்ணின்உடல்எழிலை குட்டிக்குழந்தைகளை தன்னிரக்கமின்றிரசிக்கவேண்டும்

சென்றவளின்சுவடின்றி இந்தக்கோடைதரும்காதலுணர்வை என்உதடுகளை
Recent posts

நான்கு நாய்கள்

ஷங்கர்ராமசுப்ரமணியன்
வார விடுமுறையில் போகும் இறைச்சிக் கடையில் கறிவெட்டுபவரின் கையில் ஒரு விரல் பாதியளவு துண்டாகி இருப்பதைப் பார்த்தேன். தொழிலின் ஈரத்தால் துண்டிக்கப்பட்ட இடம் ஆறாமலேயே கண்ணைப் போல வரிசையில் நிற்கும் வாடிக்கையாளர்கள் எல்லோரையும் உற்றுப் பார்க்கிறது. வெட்டப்பட்ட எல்லாவற்றுக்கும் வேறு கண் முளைத்துவிடுகிறது.

சென்ற குளிர்காலம் ஆரம்பித்து, தற்போது துவங்கியிருக்கும் கோடைக்காலம் வரை என் கவனத்தில் அதிகம் இடம்பிடித்தவை நாய்கள்தான். அதிகாலைக் குளிரில் நடைப்பயிற்சிக்குச் செல்லக் கீழிறங்கும்போது தாய்நாயின் உடலோடு உடலாக ஆக முயன்று மெத்மெத்தென்று உறங்கும் குட்டி நாய்களைப் பொறாமையோடு பார்ப்பேன். உறக்கத்தைத் தொடர விரும்பும் மனம் அந்தக் குட்டிகளோடு அடையாளம் கண்டு துக்கமும் பொறாமையும் கொள்ளும். நாய், வெயிலில்தான் இளைத்துச் சலித்து நிராசையை எச்சில் சிந்த வெளியேவிடும். குளிரின் போர்வையில் அந்த உயிர்களே அமைதியுடன் தூங்கும் அதிகாலையில், நாயைப் போலவே சலிக்கத் தொடங்கிவிடுமென் மனம்.

நான் இந்தக் காலகட்டத்தில் பார்த்த நாய்களில் நான்குக்கு ஒன்று ஆளுமைக்குள்ளேயே ஊடுருவியிருக்கும் உடல் குறைபாட்டைக் க…

புவியரசு நேர்காணல் தாஸ்தாயெவ்ஸ்கி கொடுத்த ஞானம் அது

ஷங்கர்ராமசுப்ரமணியன்
கவிதையை ஜனநாயகப்படுத்திய வானம்பாடி இதழின் தாய்ப்பறவை கவிஞர் புவியரசு. ‘தேடாதே தொலைந்து போவாய்/ வழிகள் மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன’ என்று நம்பிக்கையின்மை தொனிக்க கவிதை எழுதியவர், வாழ்க்கை முழுக்க கவிதை, அரசியல், மெய்யியல், சினிமா, வாசிப்பு எனத் தேடலுடன் இயங்கிக் கொண்டிருப்பவர். ஓஷோ முதல் சுந்தர ராமசாமி வரை வியந்த படைப்பான தாஸ்தாயெவ்ஸ்கியின் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவலை மொழிபெயர்த்தது இவருடைய வாழ்நாள் சாதனை. கோவையில் அவரது இல்லத்தில் கவிஞர் இசையுடன் சந்தித்து மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் இது…

வானம்பாடி இயக்கமும், கவிதை இதழும் தோன்றிய கதையைச் சொல்லுங்கள்?
வானம்பாடி இதழ் 1970-களின் ஆரம்பத்தில் தொடங்கப்பட்டது. சர்வதேச ரீதியாக, அனைத்து நாடுகளிலுமுள்ள மக்கள், கொந்தளிப்போடும் அரசியல் சொரணையோடும் எழுந்த புரட்சிகரமான காலகட்டம் அது. பருவநிலைகள் எல்லாரையும் கிளப்பிவிட்டு விட்டதா, பூமிக்குக் கீழே எரிமலைகள் கொந்தளித்தது காரணமா என்று தெரியவில்லை. பிரான்சில் மாணவர் புரட்சி வெடித்ததற்குப் பின்னான மனநிலையென்று சொல்லலாம். அப்துல் ரகுமான் மாதிரி நாங்களும் அப்போது பெரிய கவியரங்கங்களுக்குப்…